முத்தலாக் தடைச் சட்டம்: கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் மனைவிகள்!

முத்தலாக் தடைச் சட்டம்: கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் மனைவிகள்!

முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. 

முத்தலாக் தடைச் சட்டம்: கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் மனைவிகள்!

முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும். இதற்கு  இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த மசோதா நிறைவேறியதுடன் இதற்கு எதிராக முதல் வழக்கு உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில்  பதிவானது. ஒருலட்சம் வரதட்சணை தராததால்,  கணவர் இக்ராம் முத்தலாக் கொடுத்ததாக மதுரா போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் இக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் கூறியதாக  ஜனத் பேகம் படேல் என்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் இம்தியாஸ் குலாம் படேல் மீது புகார் அளித்தார். புகாரில் தனது கணவர் வேறு ஒருபெண்ணுடன் வாழ்ந்து வருவதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இதே போல் ஹரியானாவைச் சேர்ந்த சலாவுதீன் என்ற இளைஞர் மீது செல்போனிலேயே முத்தலாக் கூறியதாகப் புகார் அளித்துள்ளது. இதன் மூலம் முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 3 வழக்குகள் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.