முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை – யோகி அறிவிப்பு

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை – யோகி அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார்.

yogi-adithyanath

உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று காரணத்தைக் கூறி இஸ்லாமியர்களின் வீடுகளை போலீசாரே சூறையாடுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தநிலையில், முத்தலாக் விவாகரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே, முத்தலாக்கால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்களுக்கு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. கணவனால் கைவிடப்பட்ட பிற மத பெண்களும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

muslim-woman