முதல் விக்கெட் கர்நாடகா, அடுத்து ம.பி. ராஜஸ்தான்தான் – எச்சரிக்கும் மம்தா

 

முதல் விக்கெட் கர்நாடகா, அடுத்து ம.பி. ராஜஸ்தான்தான் – எச்சரிக்கும் மம்தா

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் மம்தாவின் கவலைக்குக் காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதுதான். கட்சித்தாவலுக்கு மட்டும் ஒரு வேர்ல்ட் கப் டோரணமென்ட் இருந்தது என்றால், பாஜகதான் ஆல்டைம் வின்னர். அமித் ஷாதான் மேன் ஆஃப் த டோர்னமென்ட்!

கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் (இந்த கட்டுரை எழுத ஆரம்பிக்கும்வரை) காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பதவி விலக வைத்து நாடகம் நடத்திவருகிறார் அமித் ஷா. கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி தராத மத்திய அரசை கண்டித்து எங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறோம், அல்லது எங்கள் தொகுதியில் எந்த நல திட்டமும் செயல்படுத்தப்படுவதில்லை, எனவே ராஜினாமா செய்கிறோம் என வலுவான காரணம் ஏதுமே இல்லாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்வதன் பின்னணியில் அமித் ஷா சிரித்துக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. கர்நாடகாவில் மட்டுமல்ல, பாஜக ஆளும் கோவாவிலும் பத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பதம் பார்த்திருக்கிறது பாஜகவின் பர்ஸ்.

Amit Shah

இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் அல்லது வலுவாக இருக்கும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கவிழ்க்கவும், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும் பாஜக அவசரம் காட்டுவது ஏன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் துவங்கியிருக்கும் ஆட்டத்தை அடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என விஸ்தரிக்கும் பாஜகவின் திமிர்த்தனத்தை கடுமையாக விமர்சிக்கும் மம்தாவின் கோவத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. என்ன காரணம் எனக் கேட்டால், அவருடைய கட்சியிலிருக்கும் கவுன்சிலர்கள் முதல் சில சில்லுருண்டை தலைவர்கள் பாஜக பக்கம் தாவி வருவதுதான். பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் மம்தாவின் கவலைக்குக் காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதுதான். கட்சித்தாவலுக்கு மட்டும் ஒரு வேர்ல்ட் கப் டோரணமென்ட் இருந்தது என்றால், பாஜகதான் ஆல்டைம் வின்னர். அமித் ஷாதான் மேன் ஆஃப் த டோர்னமென்ட்!