முதல் முறையாக நடை திறப்பு மாற்றம்……வரும் வெள்ளிக்கிழமையன்று பத்ரிநாத் கோயில் நடைதிறப்பு….

 

முதல் முறையாக நடை திறப்பு மாற்றம்……வரும் வெள்ளிக்கிழமையன்று பத்ரிநாத் கோயில் நடைதிறப்பு….

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் நடை திறப்பு முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமையன்று (மே15) பத்ரிநாத் கோயில் திறக்கப்பட உள்ளது. வழக்கமாக ஏப்ரல் கடைசியில் கோயில் நடை திறக்கப்படும்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் மலை வாழிடமான பத்ரிநாத்தில் பத்ரிநாராயணன்-அரவிந்தவல்லி கோயில். இந்த கோயிலைத்தான் பத்ரிநாத் கோயில் என்று அழைக்கின்றனர். இது வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இமயமலையின் கடும் குளிர் காரணமாக இது ஆண்டுக்கு ஆறுமாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்படும். இந்த ஆண்டு இம்மாதம் 15ம் தேதி பத்ரிநாத் கோயில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பத்ரிநாத் கோயில்

வழக்கமாக ஏப்ரல் கடைசியில் பத்ரிநாத் கோயில் திறக்கப்பட்ட வந்தநிலையில் தற்போது முதல் முறையாக கோயில் திறப்பு தேதி மாற்றபப்பட்டுள்ளது. பத்ரிகோயிலின் தலைமை அர்ச்சகர் கேரளாவுக்கு சென்று திரும்பி வந்ததையடுத்து அவர் தனிமைப்படுத்தலில் இருந்ததார். இதனால் பேசும் இறைவன் பத்ரி என்று கருதப்படும் தெஹ்ரி அரச குடும்பத்தின் மன்னர் மனுஜேந்திர ஷா, பத்ரிநாத் கோயில் திறப்பு தேதியை மாற்றினார்.

பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு தொடர்பாக ஜோஷிமத் துணை மண்டல மாஜிஸ்திரேட் அனில் சன்யான் கூறுகையில், வெள்ளிக்கிழமையன்று (மே15) நடை திறக்கும்போது தலைமை அர்ச்சகர் உள்பட மொத்தம் 27 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முக்கியமாக கோயில் பகுதிகளுக்குள் பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை கருத்தில்  கொண்டு கோயில் பகுதிகளுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு எடுக்கபபட்டது என தெரிவித்தார்.