முதல் நாளே மண்ணைக் கவ்விய மிஸ்டர் லோக்கல்…எதிர்முகாம் நடத்திய டர்ட்டி பார்ட்டிகள்…

முதல் நாளே மண்ணைக் கவ்விய மிஸ்டர் லோக்கல்…எதிர்முகாம் நடத்திய டர்ட்டி பார்ட்டிகள்…

தமிழ் சினிமாவில் ரெகுலர் ஹீரோக்கள் பலரின் வயித்தெர்ச்சலைச் சம்பாதித்து வெற்றி நடை போட்டு வந்த சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர் லோக்கல்’ படு தோல்வி என தியேட்டர் வட்டாரங்களிலிருந்து ரிப்போர்ட் வந்திருப்பதை ஒட்டி அவரது எதிராளிகள் பார்ட்டி வைத்துக் கொண்டாடியதாக கோடம்பாக்கம் முழுக்க செய்திகள் போதையில் மிதக்கின்றன.

இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமான சி.கா. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராகி கோடிகளில் சம்பளமும் வாங்க ஆரம்பித்துவிட்டார். இவருக்குப் போட்டியாளராகக் கருதப்படும் விஜய் சேதுபதி மிகப் பிரமாதமான கதைகளையும் இயக்குநர்களயும் தேர்வு செய்து நடித்துவரும் நிலையில் சி.கா. மொக்க காமெடிப்படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.விளைவு? இதோ நேற்று ரிலீஸான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தையும் சேர்த்து ஹாட்ரிக்காக மூன்றாவது தோல்வி.

சிவாவுக்கு செம ஓப்பனிங் இருக்கும் எனும்பட்சத்தில் நேற்று முதல் நாளே இரவுக்காட்சிகள் பல இடங்களில் ஈ ஓட்டினவாம். மொத்த பட்ஜெட்டில் படம் பாதி கூட வசூலிக்காது என்பதுதான் இன்றைய நிலவரம். இத்தகவல் கேள்விப்பட்டு மூன்றெழுத்து நாயகர்கள் மூன்று பேர் ஸ்டார் ஹோட்டல்களுக்கு தங்கள் நண்பர்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து பார்ர்டி கொடுத்து ஓவர் டர்ட்டியாய் நடந்துகொண்டார்களாம்.