முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை

 

முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெல்லிங்டன்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன.

அந்த வகையில், வெல்லிங்டனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரஹானே 46 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி மற்றும் கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி விளையாட தொடங்கியது. இன்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 89 ரன்களும், ராஸ் டெய்லர் 44 ரன்களும், டாம் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.