முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது

 

முதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

வெல்லிங்டன்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன.

அந்த வகையில், வெல்லிங்டனில் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அந்த அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இந்திய அணி 191 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் மட்டும் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய டிம் சவுதி 5 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இந்த நிலையில், வெறும் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற உள்ளது.