முதல் கட்டமாக, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 1.40 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி….

 

முதல் கட்டமாக, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 1.40 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி….

ஏற்றுமதிக்கான தடை நீக்கியதையடுத்து, முதல் கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 1.40 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் 13.5 டன்கள் ஏ.பி.ஐ.யை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய உள்ளன.

உள்நாட்டில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு  கடந்த மாதம் இறுதியில் அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்காலிமாக தடை விதித்தது. இதனால் இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் ஏமாற்றம் அடைந்தன. இதனையடுத்து ஏற்றுமதிக்கான தடை நீக்கி மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்பும்படி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

மோடி, டிரம்ப்

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதித்து இருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து முதல் கட்டமாக, அமெரிக்கா, ஸ்பெயின், பஹ்ரைன், ஜெர்மனி, பிரேசில், நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், சீஷெல்ஸ், மொரிஷியஸ் மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய 13 நாடுகளுக்கு முதல் கட்டமாக சுமார் 1.30 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளையும், மொத்தம் 13.5 கோடி டன்கள் ஆக்டிவ் மருந்து மூலப்பொருளையும் (ஏ.பி.ஐ.) இந்திய நிறுவனங்கள் அனுப்ப உள்ளன. முதல் கட்ட ஏற்றுமதியின் போது பிரேசிலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை போகாது ஆனால் 0.53 டன் ஏ.பி.ஐ. ஏற்றுமதி செய்யப்படும்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்

அதேசமயம் அமெரிக்கா கேட்டதை காட்டிலும் குறைவாகவே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அந்நாடு 48 லட்சம் மாத்திரைகளுக்கு ஆர்டர்  கொடுத்து இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டுக்கு 35.82 லட்சம் மாத்திரைகள் மட்டுமே அந்நாட்டுக்கு வழங்கப்படஉள்ளது. இரண்டாவது கட்ட ஏற்றுமதியின்போது, பிரேசில் மற்றும் கனடாவுக்கு மொத்தம் 50 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.