முதல்வர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை: தமிழிசை

 

முதல்வர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை: தமிழிசை

சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்

சென்னை: சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு நடந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீதான முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், முதற்கட்ட விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்கு தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உள்ளான முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும்  என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே பதவி விலக வேண்டும் என்ற அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.