முதல்வர் எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து!

தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் நாளை யுகாதி எனப்படும் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய், அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மலும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், வெற்றிகள் பலவும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.