முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது.

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை நிறைவடைந்ததையடுத்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை வருகிற 8-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு கூடவுள்ளது. இதில், வருகிற 23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை உள்ளிட்டவைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.