முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா…. மகாராஷ்டிராவில் ருத்ர தாண்டவம் ஆடும் தொற்றுநோய்…..

 

முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா…. மகாராஷ்டிராவில் ருத்ர தாண்டவம் ஆடும்  தொற்றுநோய்…..

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு புதிதாக 102 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 868ஆக உயர்ந்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவால் 52 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மகாராஷ்டிரா அரசும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அனில் தேஷ்முக்

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், டிவிட்டரில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி மற்றும் ஆதாரம் இல்லாத தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்ததாக 100 பேர் மீது அம்மாநில போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக 1,410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7,570 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.65.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தில் மொத்தம் 49,708 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 4,532 முகாம்களில் 4.47 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.