முதல்வன் பட பாணியில் புகார் பெட்டி… கலக்கும் உத்தரபிரதேச கலெக்டர்….

 

முதல்வன் பட பாணியில் புகார் பெட்டி… கலக்கும் உத்தரபிரதேச கலெக்டர்….

உத்தர பிரதேசம் காசியாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், அதிகாரிகள் மீதான குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக கருப்பு பெட்டி ஒன்றை கலெக்டர் வைத்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடம் பலத்த பாராட்டுக்களை பெற்றுள்ளது

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் லஞ்சம் கொடுக்காமல் எந்தவேலையும் நடக்காது என்பது போன்ற மாயை பல அரசு அலுவலகங்களில் நிலவுகிறது. மக்களும் நமக்கு காரியம் உடனடியாக நடந்தால் சரிதான் என்ற எண்ணத்தில் மறைமுகமாக லஞ்சம் மற்றும் ஊழலை ஆதரிக்க தொடங்கி விட்டனர். அதேசமயம் நேர்மையான பல அரசு பணியாளர்கள் உள்ளனர் என்பதை நாம் மறுக்க முடியாது.

காசியாபாத் கலெக்டர் அலுவலகம்

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அஜய் சங்கர் பாண்டே. அவர் தனது அலுவலகத்தில் லஞ்சம், ஊழல் மற்றும் எந்தவிதமான தவறான பணம் பெறும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அரசு பணியாளர்கள் மீதான புகாரை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக அலுவலகத்தில் கருப்பு பெட்டி ஒன்றை வைத்துள்ளார். 

அஜய் சங்கர் பாண்டே

இது தொடர்பாக கலெக்டர் அஜய் சங்கர் பாண்டே கூறுகையில், அரசு அதிகாரிகள் மீதான புகாரை பொதுமக்கள் இந்த பெட்டியில் போட வேண்டும். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த பெட்டியில் அரசு பணியாளர்கள் தங்களது எந்தவிதமான புகார்களையும் அதில் போடலாம் என தெரிவித்தார். முதல்வன் பட பாணியில் புகார் பெட்டி வைத்த கலெக்டரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.