முதலீட்டாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் கோடி லாபம்! சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்தது…..

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் கோடி லாபம்! சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்தது…..

கடந்த 5 பங்கு வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சென்ற வாரம் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. அதேசமயம் அமெரிக்கா-சீனா இடையிலான முதல் கட்ட வர்த்தகம் விரைவில் கையெழுத்தாக உள்ளது, அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தணிந்தது மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் மற்ற தினங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

டிரம்ப், ஜின்பிங்

நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.67 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது. 

பங்கு வர்த்தகம்

ஒட்டு மொத்த அளவில் சென்ற வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்த அளவில்  மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.11 புள்ளிகள் உயர்ந்து 41,599.72 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 30.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,256.80 புள்ளிகளில் முடிவுற்றது.