முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடியை அள்ளி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது….

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடியை அள்ளி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் அமோகமாக இருந்தது. சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரம் நிறைவேற உள்ளது. சீனாவின் துணை பிரதமர் லியு ஹீ அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் அபாயம் தணிந்தது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் இன்று சற்று தணிந்தது போல் காணப்பட்டது. இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் வெளிவர உள்ளது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் மாருதி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, என்.டி.பி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,819 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 755 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 207 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 634.61 புள்ளிகள் உயர்ந்து 41,452.35 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டு புள்ளிகளில் முடிவுற்றது.