முதலீடு செய்வது தொடர்பாக சுயமாக முடிவெடுப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் கம்மிதான்!

 

முதலீடு செய்வது தொடர்பாக சுயமாக முடிவெடுப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் கம்மிதான்!

சுயமாக முடிவு எடுத்து முதலீடு செய்வதில் ஆண்களைக்  காட்டிலும் பெண்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். 33 சதவீத பெண்கள் மட்டுமே முதலீடு தொடர்பாக சுயமாக முடிவு எடுக்கின்றனர் என ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு

ஆணும், பெணும் சமம்தான் என்று எல்லோரும் வாய் நிறைய பேசி வருகிறோம். ஆனால் அவர்களுக்கு சம உரிமை கொடுக்கிறோமோ என்று கேட்டால் நிறைய பேர் வாயை திறக்க மாட்டார்கள். 20, 25 வருஷத்துக்கு முன்பு இருந்ததை காட்டிலும் இப்பம் பெண்கள் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கிறாங்க என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், நிதி நிர்வாகத்தை பொறுத்தவரை இன்னும் ஆண்களின் ஆளுமைதான் நிலவுகிறது. இதனை உறுதி செய்வது போல் ஒரு ஆய்வறிக்கை வெளியே வந்துள்ளது.

சேமிப்பு

நாட்டிலுள்ள 8 நகரங்களில் 4,013 ஆண்கள் மற்றும் பெண்களிடம் சுயமாக முதலீடு தொடர்பாக முடிவு எடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவின்படி, சுயமாக முதலீடு செய்வது தொடர்பாக முடிவு எடுப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர்.  64 சதவீத ஆண்கள் முதலீடு தொடர்பாக சுயமாக முடிவு எடுக்கின்றனர். அதேவேளையில் 33 சதவீதம் அளவுக்கே பெண்கள் முதலீடு செய்வது தொடர்பாக சுயமாக முடிவு எடுக்கின்றனர். அதுவும் அந்த பெண்களின் கணவர் அல்லது அவளது பெற்றோர் கொடுக்கும் ஆதரவு மூலமாகதான் முதலீடு தொடர்பாக அவர்களால் சுயமாக முடிவு எடுக்க முடிகிறதாம்.

புதுசா ஒரு கார் அல்லது வீடு வாங்கு விஷயத்திலோ அல்லது டெபாசிட் செய்வது உள்ளிட்ட முதலீடு  விவகாரங்களில் ஆண்களின் டாமினேஷன் உள்ளது. அதேசமயம், தங்க நகைகள், வீட்டுக்கு தேவையான சமான்களை வாங்குவதில் பெண்களின் கையை ஓங்கி உள்ளதாம்.

 வீடு

ஆணா, பெண்ணா எதற்காக முதலீடு செய்றாங்கன்னு காரணத்தை பார்த்தா பெரும்பாலும் ஒண்ணாதான் இருக்கு. குழந்தைகளின் கல்வி, வீட்டு கனவு, குழந்தைகள் திருமணம், கடன் இல்லா வாழ்க்கை, அதிக தரமான வாழ்க்கை போன்றவற்றை இலக்காக வைத்துதான் அவங்க முதலீடு செய்றாங்களாம்.