முதலில் பந்துவீசுகிறது இந்தியா! இந்திய அணியில் மாற்றம் என்ன?!

 

முதலில் பந்துவீசுகிறது இந்தியா! இந்திய அணியில் மாற்றம் என்ன?!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பந்து வீசுகிறது இந்திய அணி. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்க உள்ளது. 

ஆஸ்திரேலிய அணியில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் வெளியில் அமர்த்தப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் அணியில் எடுத்து வரப்பட்டுள்ளார். இந்திய அணியின் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜ்கோட் மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணி இன்றைய போட்டியிலும் களமிறங்க உள்ளது. 

 

பெங்களூரு மைதானத்தில் அனுபவமிக்க சுழல்பந்து வீச்சாளர் சஹல் மீண்டும் வெளியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். குல்தீப் தொடர்ந்து அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் (கீப்பர்), மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா

indian-3rd-odi-squad

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (கீப்பர்), ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.

australia-squad