முதலிடத்தில் எடப்பாடி! இரண்டாமிடத்தில் மோடி! போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்!

முதலிடத்தில் எடப்பாடி! இரண்டாமிடத்தில் மோடி! போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்!

விஞ்ஞானம் ஒரு பக்கம் புதிது புதிதான கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. சந்திராயன் -2 பற்றி எல்லாம் எவ்வளவு பெருமை கொண்டு, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் மணித்துளிகளுக்காக வேண்டிக் கொண்டிருந்தோமோ அதை விட அதிகமான இந்தியர்கள் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் பத்திரமாக மீட்கப்பட தவமிருந்தார்கள். சுஜித் உயிரை பலி கொடுத்த பிறகு தமிழக அரசுக்கு கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிதாய் உபகரணத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்திருக்கிறது.

death

இந்த நூற்றாண்டிலும், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. இத்தனைக்கும் இந்த நடைமுறை தடை செய்யப்பட்டிருந்தாலும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வருடந்தோறும் பல துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும் போது விஷவாயு தாக்கி மரணம் அடைகின்றனர். எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பை எந்த மாநில அரசும் இன்னமும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், 1993- ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியா முழுவதும் இப்படி சுத்தம் செய்வதற்காக ஈடுபட்டு, விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை  620.  இப்படி, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு அதிகளவில் உயிரிழப்பது தமிழகத்தில் தான் என்றும் அதிர்ச்சி தருகிறது ஆய்வறிக்கை. 

edappadi and modi

நமது முதல்வர் எடப்பாடியின் தமிழகத்தில் மட்டுமே 144 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தப்படியாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முதலிடத்தை நமது முதல்வரும், இரண்டாமிடத்தை நமது பிரதமரும் பிடித்துள்ளனர். அமெரிக்கா…. ப்ரேசில், துபாய், சைனா, லண்டன்னு வெளிநாடுகளுக்கு சுற்றுலா போறவங்க…. தொழில் தொடங்க அழைப்பு விடுக்க போறவங்க… கொஞ்சம் அங்கே எப்படி சுத்தம் செய்யுறாங்கன்னும் பார்த்துட்டு வாங்க எஜமானுங்களா.. என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.