முதலமைச்சர் – ஆளுநர் திடீர் சந்திப்பின் பின்னணி இது தான்! வெளியான தகவல்கள்

 

முதலமைச்சர் – ஆளுநர் திடீர் சந்திப்பின் பின்னணி இது தான்! வெளியான தகவல்கள்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்தித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்தித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க ஓபிஎஸ் தன்னுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, சந்திப்பு நடந்தது உண்மை தான், ஆனால் ஆட்சி கவிழ்ப்பு சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தற்போது ஓபிஎஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு பக்கம் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்த அதே வேளையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ் பவனில் சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் அடுத்தவராம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்புகள் வெளிவரும் பட்சத்தில் ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், முன்னதாகவே ஆளுநரை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் ரெட் அலர்ட் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

மேலும், இந்த சந்திப்பின் போது கருணாஸ் விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.