முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்

 

முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்

வெற்றிமாறன், சூர்யா – விஜய்யுடன் அடுத்த படத்தில் இணைகிறார் என்ற  தகவல் வெளியானது.

இயக்குநர்  வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நடிகர்  தனுஷை வைத்தே படம் இயக்கி வெற்றி கண்டு வருகிறார்.  

ttn

சமீபத்தில் இவரின் அசுரன் திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றதாகப்  படத்தின் தயாரிப்பாளர்  தாணு அறிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் சூரியை வைத்து காமெடி படம் இயக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், சூர்யா – விஜய்யுடன் அடுத்த படத்தில் இணைகிறார் என்ற  தகவல் வெளியானது.

இந்நிலையில்  சூர்யாவுடன்  வெற்றிமாறன் இணைகிறார் என்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.




இதுகுறித்து கலைப்புலி எஸ். தாணு தனது டிவிட்டர் பக்கத்தில், அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் சூர்யா 40 படத்தை தி வி கிரியேஷன் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ttn

 முன்னதாக நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.