முதன்முறையாக ரூ.2 கோடி செலவில் சோலார் பேனல்: தமிழக அரசின் புதிய திட்டம் !

 

முதன்முறையாக ரூ.2 கோடி செலவில் சோலார் பேனல்: தமிழக அரசின் புதிய திட்டம் !

வரும் காலங்களில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு இதனை மாற்றிக் கொள்ளும் அலகிலும், கிராமங்களுக்குத் தேவையான மின்சார தேவையில் 150% தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்திலும் இது வடிவமைக்கப்படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்காவில் உள்ள இரும்பையூர் என்னும் கிராமத்தில் சோலார் மின் திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கவுள்ளது. இது தமிழகத்திலேயே முதன் முறையாக 4,000 சதுர அடி பரப்பில் ரூ.2 கோடி செலவில் துவங்கவுள்ளது. பெரும்பாலாக மின் வெட்டு, நகர்ப்புற பகுதிகளை விடக் கிராமப்புற பகுதிகளிலேயே அதிகமாக நடக்கும். இந்த திட்டத்தின் மூலம்  இரும்பையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைக்க  வழிவகை செய்யும். குறிப்பாக, மோட்டார் மூலம் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகளுக்கு மின்வெட்டு பிரச்னை இருக்காது.

solar

 

இரும்பையூர் கிராமத்தில் சோலார் மின் திட்டம் செயல்படுத்துவதன் முழு நோக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். தமிழகம் நாளுக்கு நாள் புதிய திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதனால், வரும் காலங்களில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு இதனை மாற்றிக் கொள்ளும் அலகிலும், கிராமங்களுக்குத் தேவையான மின்சார தேவையில் 150% தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்திலும் இது வடிவமைக்கப்படவுள்ளது. இந்த புதிய சோலார் மின்திட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.