முடியை வெட்டியதால் நஷ்டம்… நடிகருக்கு ரூ.1 கோடி அபராதம்!

 

முடியை வெட்டியதால் நஷ்டம்… நடிகருக்கு ரூ.1 கோடி அபராதம்!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகமுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
மலையாளத்தில் இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷேன் நிகம். தமிழில் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் நடிக்கவும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். வெயில் என்ற மலையாள படத்தில் நடிக்க ஷேன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகமுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
மலையாளத்தில் இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷேன் நிகம். தமிழில் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் நடிக்கவும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். வெயில் என்ற மலையாள படத்தில் நடிக்க ஷேன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்துக்காக முடியை நீளமாக வளர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் முடியை நீளமாக வளர்த்துப் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கிடையே குர்பானி என்ற படத்தில் நடிக்க ஷேன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

shane

 
வெயில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத சூழலில், குர்பானி படத்துக்காக ஷேன் தன்னுடைய நீளமான முடியை வெட்டியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ஷேன் மீது, வெயில் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறினர்.
இதனால், ஷேன் நிகமை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. இதை எதிர்த்து ஷேன் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்தார். ஷேனுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து, அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

shane

இதை ஏற்றுக்கொள்வதாக தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. ஆனால், ஷேனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளருக்கு அவர் ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கினால் தடையை நீக்குவதாக கூறியுள்ளது.