முடிந்தால் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசை கவிழ்த்து பாருங்க……. பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த உத்தவ் தாக்கரே….

 

முடிந்தால் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசை கவிழ்த்து பாருங்க……. பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த உத்தவ் தாக்கரே….

மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்க என பா.ஜ.க.வுக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். காங்கிரஸ்-சிவ சேனா இடையே நடக்கும் சண்டையால் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு தானாகவே விரைவில் கவிழ்ந்து விடும் என பா.ஜ.க. அண்மையில் தெரிவித்து இருந்தது.

பா.ஜ.க.

இந்நிலையில் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், கர்நாடகாவை போன்று மகாராஷ்டிராவிலும் ஆப்ரேஷன் லோட்டஸை செயல்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதை கடுமையாக சாடினார். மேலும் அவர் கூறியதாவது: வாக்காளர்கள் ஏற்கனவே பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து  தூக்கி எறிந்து விட்டார்கள்.

சரத் பவார்

மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என பா.ஜ.க.வுக்கு சவால் விடுக்கிறேன். தற்போதைய அரசுடன் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மகாராஷ்டிரா மக்களின் வளர்ச்சிக்காக மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு ஒவ்வொரு பணியையும் செய்கிறது. சிவ சேனா அதிகார பசியில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் கலந்து கொண்டார்.