முடிந்தது அரசியல் குழப்பம்… இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில்

 

முடிந்தது அரசியல் குழப்பம்… இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில்

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். அதன்பின்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்ட அறிவிப்பை, அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்தார். இதனால், நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

இதனையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், ரணி ல் விக்ரமசிங்கே பிரதமராக நீடிக்கவும் அனுமதியளித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் 51 நாட்கள் இலங்கையில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.