முடக்கத்தால் நகரங்களை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்….. வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூலிக்க கூடாது…..

 

முடக்கத்தால் நகரங்களை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்….. வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் குடியிருப்பவர்களிடம் வாடகை  வசூலிக்க கூடாது…..

உத்தர பிரதேசம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளர்களிடம் வாடகை கேட்கக்கூடாது என அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள்

கோரோனா வைரஸ் மற்றும் முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் கைகளில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்டத்திலும் நிதி கவலைகளால் நகர்புறங்களிலிருந்து தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இது கவுதம் புத்த நகர் மாவட்ட நிர்வாகத்தை உத்தர பிரதேச பேரிடர் நிர்வாக சட்டம் 2015ஐ அமல்படுத்த தூண்டியது கவுதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் பி.என். சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களது வீடுகளில் குடியிருப்பவர்கள் குறைந்த ஊதிய தொழிலாளர்களாக இருந்தால் அவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.