முக்கிய நகரங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை! தமிழகத்தில் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்

 

முக்கிய நகரங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை! தமிழகத்தில் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்

மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தாலும், மும்பை, பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் வங்கிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை தொடர்ந்து லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை, பைடுஜி மற்றும் இதர பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. சில வர்த்தக பிரிவினர் தீபாவளிக்கு பிறகு விக்ரம் சாம்வாட் புதிய ஆண்டை கொண்டாடுவர்.

வங்கி

அதேசமயம் தீபாவளிக்கு பிறகு வரும் இந்த பண்டிகைகள் அனைத்தும் நாட்டில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படுவதில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இதனால் அந்த பகுதிகள் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் என்.ஐ. சட்டத்தின்கீழ் விடுமுறை அளிக்கப்படுவது வாடிக்கை. மும்பை, புனே,அகமதாபாத், லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர் மற்றும் இதர குறிப்பிட்ட நகரங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை.

வங்கி விடுமுறை

கர்நாடகாவில் இன்று வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும். ஆனால் பாலி பிரதிபாதா பண்டிகையை முன்னிட்டு நாளை அங்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் லக்னோ மற்றும் கான்பூரில் மட்டும் இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. சென்னை, திருவனந்தபுரம், பாட்னா, ஜம்மு மற்றும் கோவா உள்ளிட்ட பிற நகரங்களில் வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.