முகூர்த்த நேரத்தில் காணாமல் போன மணப்பெண்!  கூட்ட நெரிசலில் விழி பிதுங்கிய மணமகன்!

முகூர்த்த நேரத்தில் காணாமல் போன மணப்பெண்!  கூட்ட நெரிசலில் விழி பிதுங்கிய மணமகன்!

குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் விநாயகம். 24 வயதாகும் இவருக்கும் வெளை கொடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் இரு வீட்டுப் பெரியவர்கள் கல்யாணம் நிச்சயம் செய்தார்கள். குடியாத்தம் மேல்பட்டி ரோட்டில் உள்ள முருகன் கோவிலில் இவர்களது கல்யாணம் நடக்க இருந்தது.  இதற்காக இரு தரப்பு வீட்டிலிருந்து உற்றார் உறவினரும் என பலரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.

marriage

காலை 6 மணிக்கு மேல் ஏழு முப்பது மணிக்குள்ளாக  முகூர்த்த நேரம் ஆரம்பமானது. மணமக்கள் அலங்காரத்துடன் மேடைக்கு வந்தனர். தொடர்ந்து நலங்கு வைக்கும் சடங்குகள், மந்திரங்கள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன. பிறகு மணமக்கள் முகூர்த்த வேட்டி சேலை மாற்றி வருவதற்காக அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணமகன் முதல் ஆளாக வேட்டி சட்டை அணிந்துக் கொண்டு வந்து மேடையில் உட்கார்ந்து விட்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் முகூர்த்த சேலை மாற்றி வருவதற்காகச் சென்ற மணப்பெண் வரவில்லை. முகூர்த்த நேரம் முடிய போகிறது, பெண்ணை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க என்று நான்கைந்து முறை இவர்களது திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த புரோகிதர் குரல் கொடுத்தும் மணமகள் வரவில்லை. உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்த மணமகன் தரப்பினருக்கு லேசாக சந்தேகம் கிளம்பியது. அதனால் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்று தெரிவிக்கவும்,  மணமகள் அறைக்கு குடும்பத்துடன் சென்று பார்த்தனர்.

aishwarya

மணப்பெண்ணான ஐஸ்வர்யாவை காணவில்லை. அவரது மொபைல் ஃபோனைத் தொடர்பு கொண்டாலும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அது கோயில் என்பதாலும் வேறு சில கல்யாணமும் அப்போது நடந்து கொண்டிருந்தாலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மணப்பெண் ஐஸ்வர்யா தப்பிச் சென்று விட்டாரா? ஏன் தப்பிச் சென்றார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. பெண் வீட்டார், தங்களது பெண்ணைக் காணவில்லை என்கிற கவலையில் இருக்க, மணமகன் வந்திருந்த நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் நின்று போனதும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தார். கல்யாணம் நின்றுவிட்டது.  இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.  கல்யாண வீட்டில் குளிக்கச் சென்று மணமகள் ஐஸ்வர்யா மாயமானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.