முகவரி மாற்றம்… ஆதார் கட்டுப்பாட்டைத் தளர்த்திய மத்திய அரசு!

முகவரி மாற்றம்… ஆதார் கட்டுப்பாட்டைத் தளர்த்திய மத்திய அரசு!

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தொடர்பாக இருந்துவந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
அரசு கொண்டுவரும் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு நேரடியாக சென்று சேர வசதியாக ஆதார் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், நிரந்தர கணக்கு எண் (பான்), பரஸ்பர நிதி முதலீடுகள், ஓய்வூதியம், செல்போன் சேவை, சமையல் எரிவாயு என பல திட்டங்களோடு ஆதார் இணைக்கப்பட்டது. 
இதனால் ஆதார் அட்டை மிக முக்கியமான அட்டையாக மாறியது. இதில் முகவரி மாற்றுவதற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. 

aadhar card

சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று தங்கும்போது ஆதார் அட்டையில் உள்ள முகவரியும் தற்போது தங்கும் முகவரியும் வெவ்வேறாக இருக்கும். இதனால், அவர்கள் கே.ஒய்.சி ஆவணங்கள் சமர்ப்பிக்கும்போது அவை நிராகரிக்கப்பட்டுவந்தன. தற்போது சுய அறிவிப்பு கடிதத்துடன் ஆதார் எண்ணை இணைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு விதிகளைத் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. 
பலரும் வேலை காரணமாக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்று தங்க வேண்டியுள்ளது. அப்போது வங்கிக் கணக்கு தொடங்க தங்கள் ஆதாரை அளிக்கின்றனர். ஆனால், முகவரியில் வித்தியாசம் உள்ளதாக அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை மூலம், தாங்கள் வேலை செய்யும் இடத்தை தங்களின் தற்போதைய முகவரியாக வைத்து இவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.