மீன் வியாபாரிக்கு கொரானா தொற்று..ஒரு வாரத்திற்கு மீன் விற்கத் தடை!

 

மீன் வியாபாரிக்கு கொரானா தொற்று..ஒரு வாரத்திற்கு மீன் விற்கத் தடை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக இருக்கும் நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக இருக்கும் நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய  முதல்வர், சில நாட்களில் புதிதாக கொரோனா பரவல் இருக்காது என்று உறுதியுடன் தெரிவித்தார். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  கொரோனாவால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருப்பினும், வியாபாரிகளுக்கு கொரோனா பரவுகிறது. 

ttn

இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு மீன் விற்பனைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த மீன் வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக விழுப்புரம் மீன் மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும், அவருடன் இருந்த நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.