மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி! – உற்சாகத்தில் மீனவ கிராமங்கள்

மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி! – உற்சாகத்தில் மீனவ கிராமங்கள்

ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எல்லா தொழில்களும் முடங்கிய நிலையில், மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டது. இதுவும் உணவுப் பொருள் என்ற அடிப்படையில் மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனுமதிப்பதா, வேண்டாமா என்று குழப்பத்திலிருந்தது தமிழக அரசு.

மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எல்லா தொழில்களும் முடங்கிய நிலையில், மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டது. இதுவும் உணவுப் பொருள் என்ற அடிப்படையில் மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அனுமதிப்பதா, வேண்டாமா என்று குழப்பத்திலிருந்தது தமிழக அரசு.

fishermen-67

மீன் பிடித்தல், மீன்களைப் பதப்படுத்துதல், மீன்களை வளர்த்து விற்பனை செய்தல், அதேபோல மீன்களை சேமித்து வைத்தல், வளர்ப்பு மீன்களுக்கு தேவையான உணவுகளை  தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள், வணிக ரீதியாக மருந்து உள்ளிட்ட தேவைகளுக்காக மீன்களை உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்தக்கூடியவர்கள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மீன்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள்,  அதேபோன்று பிற மீன் சார்ந்த பொருட்கள் அதற்கான வேலையாட்கள் செல்வதற்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது.

fishermen-78

சமூக இடைவெளி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்க கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 20 நாட்களாக வீட்டில் முடங்கிக்கிடந்த மீனவர்கள் இதனால் உற்சாகமடைந்துள்ளனர். கடலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் மீன் பிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.