மீண்டும் 29 ஆயிரத்தை எட்டியது தங்க விலை !

 

மீண்டும் 29 ஆயிரத்தை எட்டியது தங்க விலை !

ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது.

ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது.  

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.5  உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,632க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.40  உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,056க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.47.70 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.47,700க்கும் விற்கப்பட்டு வருகிறது.