மீண்டும் வருகிறான் மருதநாயகம்…ஆனால் ஹீரோ கமல் இல்லை!?

 

மீண்டும் வருகிறான் மருதநாயகம்…ஆனால்  ஹீரோ கமல் இல்லை!?

நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர்.

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  அவர் அரிதாரம் பூசாத வேடங்களே இல்லை. நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர். கமல் ஹாசன் சாதனை நாயகனாக இருந்த போதிலும், அவரை பார்க்கும் அத்தனை ரசிகர்களும் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி மருதநாயகம் படம் எப்போது வெளியாகும்? என்பது தான். 

ttn

1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின. இப்படம் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் பற்றியது. மருதநாயகம் திரைப்படம் எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பில்  இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவர் படப்பிடிப்பு தளத்திலிருந்தார்.

ttn

அவருடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் உடனிருந்தனர். இதனால் இந்த திரைப்படம் உலகளவில் கவனத்தை பெற்றது எனலாம். இதிலிருந்து ஒரு சண்டைக்காட்சி தான் இதுவரை மக்கள் பார்த்த காட்சியாகும்.  1997 இல் இப்படத்தை தயாரிக்க 50 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அப்போதைய நிலவரப்படி அந்த தொகை மிகப்பெரிய தொகையாகும். அதனால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. 

ttn

இந்நிலையில் மருதநாயகம் படத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கமல் ஹாசன். ஆனால்  இந்த முறை நாயகன் அவர் இல்லையாம். நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள இப்படத்தை இயக்கி, ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கவுள்ளாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட்டாக இருக்கும் என்று நம்பலாம்.