மீண்டும் முகமூடி ரெடி பண்ணுங்க – சீனாவில் பரவும் புதிய வைரஸ் -பக்கத்து நாடுகளுக்கும் பரவுகிறது -பலர் பலி ..

மீண்டும் முகமூடி ரெடி பண்ணுங்க – சீனாவில் பரவும் புதிய வைரஸ் -பக்கத்து நாடுகளுக்கும் பரவுகிறது -பலர் பலி ..

பெய்ஜிங்கில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு  புதிய வைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் இருமலில் தொடங்கி கடைசியில் சிறுநீரகம்  செயலிழந்து உயிர் போகிறது.  சீனாவில்  SARS போன்ற வைரஸ்  பாதித்து மூன்று  பேர் உயிரிழந்துள்ளனர். இது பக்கத்து  நாடுகளுக்கும்  தென் கொரியாவிற்கும் பரவுகிறது.

இதனால் பெய்ஜிங் மேற்கு ரயில் நிலையத்தில் வுஹான் ரயில் நிலையத்தில் முகமூடி அணிந்த பயணிகள் பலர் காணப்படுகிறார்கள். 
சீன சுகாதார அதிகாரிகள் திங்களன்று, நாட்டில் ஒரு புதிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறினர். 
கொரோனா வைரஸ்  காரணமாக 136 புதிய நிமோனியா நோயாளிகள்  பெய்ஜிங்  நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட 62 பேரையும் சேர்த்து மொத்தம் 200 பேருக்குமேல் இந்த வைரஸால் பாதித்து 3 பேர் பலியாகியுள்ளனர்.

corona-virus

இந்த வைரஸ் தொற்றினால் கடுமையான  சுவாசகோளாறு இருக்கும்  SARS போன்ற கொரோனா வைரஸ்களும்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது, சார்ஸ் சீனாவில்  பரவ தொடங்கியபோது உலகளவில் கிட்டத்தட்ட 650 பேரைக் கொன்றது. கொரோனா வைரஸ்களின் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் இருமல் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை ஏற்பட்டு  சில சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்படலாம் 

இதற்கிடையில், வுஹானில்  35 வயதான  சீன பெண்  கொரோனா வைரஸ் பாதித்த  முதல் நோயாளி என  தென் கொரியா திங்களன்று தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும்  மொத்தம் மூன்று நோயாளிகள் இருக்கிறார்கள்  .

உலக சுகாதார அமைப்பு ஒரு ட்வீட்டில், “ஒரு விலங்கு மூலமே இது பரவியதாக தெரிகிறது” என்று கூறியுள்ளது. இருப்பினும், இதுவரை எந்தவொரு மனிதனுக்கும் மனிதன் மூலமாக  பரவியதை  உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வைரஸ் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்த கவலைகளைத் தூண்டியது. சீனாவிலும் கோடிக்கணக்கான மக்கள் புத்தாண்டு நேரத்தில், உள்நாட்டிலும்  வெளிநாட்டிலும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உஹான் நகரில் இந்த நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,700 க்கு மேல்  இருக்கும் என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உலகளாவிய தொற்று நோய் பகுப்பாய்வுக்கான எம்.ஆர்.சி மையத்தின் அறிக்கை மதிப்பிட்டுள்ளது. சீன சுகாதார அதிகாரிகள் இந்த அறிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.