மீண்டும் பிரதமராகும் மோடி: கலைந்தது ராகுலின் கனவு!?

 

மீண்டும் பிரதமராகும் மோடி: கலைந்தது ராகுலின் கனவு!?

மக்களவை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளார். 

மக்களவை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளார். 

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று  வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைத் தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. இதில் பாஜகவே பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.

modi

இந்நிலையில் கருத்துக் கணிப்பு உண்மை என்பது போலவே காலை முதலே பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 108 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

rahul

டெல்லியில் மாலை 5.30 மணிக்கு மோடி தலைமையில் நடைபெறவுள்ள பா.ஜ.க. ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில்  மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. இதன்மூலம் இந்தமுறை பிரதமராகி விடலாம் என்ற ராகுல் காந்தியின் கனவு பலிக்காமல் போனது  குறிப்பிடத்தக்கது.