மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா ரவி

 

மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா ரவி

ஜெய் மற்றும் அதுல்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். 

சென்னை: ஜெய் மற்றும் அதுல்யா மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். 

ஜெய்- அதுல்யா ரவி இருவரும் சேர்ந்து நடித்துள்ள படம் கேப்மாரி. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு சம்பத்தில் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் இவர்களின் கூட்டணி உருவாகியுள்ளது. 

ஆம்… ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றி செல்வன் இயக்கவுள்ளார்.சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

jai

இதில் ஜெய் IT துறையில் வேலை செய்யும் நபராக பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வைபவின் சகோதரர் சுனில் இதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.