மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமார் – ராஜீவ் மேனன் கூட்டணி

 

மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமார் – ராஜீவ் மேனன் கூட்டணி

ராஜிவ் மேனனும், ஜிவி பிரகாஷும் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை: ராஜிவ் மேனனும், ஜிவி பிரகாஷும் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிராகாஷ் உற்சாகத்தில் இருக்கிறார். அவர் நடித்து வெளிவந்திருக்கும் சர்வம் தாளமயம் படத்திற்கு  பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நிஜத்திலும் ஜி.வி. ஒரு இசைக்கலைஞராக இருப்பதால் அவர் காதாபாத்திரத்தின் தன்மையை  உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு படம் இயக்க வ்ந்திருக்கும் ராஜீவ் மேனன் சந்தோஷத்தில் உள்ளார். இதனால் உடனடியாக அடுத்த படத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தப் படத்திலும் ஜி.வி.பிராகஷ்குமாரே நடிக்க இருக்கிறார். இசைய்மைப்பு செய்ய ஏ.ஆர்.ரகுமானிடம் அனுமதி கேட்க, அவரும் தானே இசையமப்பதாக கூறியிருக்கிறார். ராஜீவ் மேனன் அடுத்தப் படத்திற்கான பணிகளை இப்போதே தொடங்கி  விட்டதாக தெரிகிறது.