மீண்டும் குறைந்தது தங்க விலை !

 

மீண்டும் குறைந்தது தங்க விலை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தைச் சந்தித்தது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 4 ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்து கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தங்க விலை குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,628க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,024க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.47.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.47,700க்கும் விற்கப்படுகிறது.