மீண்டும் காதலில் சிக்கிய அமலாபால்… கல்யாணத்திற்கு ரெடியாகுகிறார்! அமலா பால் வெளியிட்ட வீடியோ!

 

மீண்டும் காதலில் சிக்கிய அமலாபால்… கல்யாணத்திற்கு ரெடியாகுகிறார்! அமலா பால் வெளியிட்ட வீடியோ!

‘ஆடை’ படத்தில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருந்தார் நடிகை அமலாபால். ஆடையின்றி நடித்த காட்சிகள் என்று படத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தாலும், படம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் படத்தின் எதிர்மறையான விளம்பரங்களினால், இது குடும்பத்தோடு பார்க்கக்கூடாத அந்த மாதிரியான படம் என்று நினைத்து மக்கள் பார்க்க வரவில்லை.

‘ஆடை’ படத்தில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருந்தார் நடிகை அமலாபால். ஆடையின்றி நடித்த காட்சிகள் என்று படத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தாலும், படம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் படத்தின் எதிர்மறையான விளம்பரங்களினால், இது குடும்பத்தோடு பார்க்கக்கூடாத அந்த மாதிரியான படம் என்று நினைத்து மக்கள் பார்க்க வரவில்லை. வேறு காட்சிகளை எதிர்பார்த்து திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள்.

amala paul

தயாரிப்பாளராக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் இழந்தார் அமலாபால். தற்போது ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள ஆலப்புழா ‘போட் ஹவுஸில்’ தங்கிய அவர், போட் ஹவுஸில் தங்கியிருந்து, ஏகாந்தமாக வாழ்க்கையை அனுபவிப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு, அதை எடுத்தவர் தன் அன்புக்குரியவர் எனும் படியான Shot by #Love என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். 
சில வருடங்களுக்கு முன், இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட நடிகை அமலா பால், தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது போல் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தான் விரைவில் இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக அமலாபால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

amala paul and al vijay

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை அமலாபால், “அறுவடை நேரம் நெருங்கும் போது, சூரியனின் கண்கள் தானியங்களை பக்குவமடையச் செய்த வேளையில் களத்துக்குள் செல்லுங்கள் அன்புக்குரியவரே” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். நடிகை அமலாபாலின் செல்லக் காதலன் மற்றொரு நடிகரா அல்லது தயாரிப்பாளரா என தெரிந்துக் கொள்ள அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்ட நடிகை அமலா பால் மீண்டும் ஒரு முறை ரிலேஷன்ஷிப்பில் மூழ்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.