மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த ‘ரூட் தல’: கற்களை வீசி அடித்து கொண்ட மாணவர்கள்!

 

மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த ‘ரூட் தல’: கற்களை வீசி அடித்து கொண்ட மாணவர்கள்!

திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட ரூட்டில் வரும் மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி தகராறு இருந்துள்ளது

சென்னை: சென்னையில் ரூட் தல பிரச்னை காரணமாக ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

route thala

திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட ரூட்டில் இருந்து ரயிலில் வரும் மாணவர்களுக்கும், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட ரூட்டில் வரும் மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி தகராறு இருந்துள்ளது. இதனால் கடந்த 18ஆம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதையடுத்து  எழும்பூர் ரயில்வே போலீசார் இந்த மோதல் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட  9 மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

route thala

முன்னதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் போலீசார் அவர்களை கைது செய்ததோடு ரூட் தல-களை  காவல்நிலையம் அழைத்து வந்து இனிமேல் மோதலில் ஈடுபடமாட்டோம் என என்று பிராமண பத்திரம் எழுதி வாங்கினர். இதனால் சில மாதங்கள் அமைதியாக வலம்வந்த இவர்கள் தற்போது மீண்டும்  ரூட் தல பிரச்னையை கையிலெடுத்துள்ளனர்.