மிரட்ட வரும் ‘2.0’ ஸ்னீக் பீக்: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரஜினி ரசிகர்கள்

 

மிரட்ட வரும் ‘2.0’ ஸ்னீக் பீக்: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு ரிலீசாகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு ரிலீசாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதற்கேற்ப கடந்த மாதம் ரிலீசான இப்படத்தின் டீசர் இந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடு இணையற்ற உழைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒரு முன்னோட்டமாக இந்த ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகவுள்ளது.

தமிழ்-தெலுங்கு-ஹிந்தி மொழிகளில் வெளியான ’2.0’ டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்ததுடன், படத்தில் இடம்பெற்றிருந்த மிரட்டலான விஎஃபெக்ட்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிரளவைத்தது. இதனால், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவ.29ம் தேதி பிரம்மண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.