மிரட்டும் எபோலா; காங்கோவில் 655 பேர் பலி!

 

மிரட்டும் எபோலா; காங்கோவில் 655 பேர் பலி!

, கடந்த 1976-ஆம் ஆண்டு சூடான் நாட்டில் முதன்முதலாக பரவியது. அதற்கு பின்னர், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவியது. காய்ச்சல், கடுமையான தலைவலி, ரத்தப்போக்கு உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகள்

கின்ஷாசா: காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 655 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் எபோலா வைரஸ், கடந்த 1976-ஆம் ஆண்டு சூடான் நாட்டில் முதன்முதலாக பரவியது. அதற்கு பின்னர், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவியது. காய்ச்சல், கடுமையான தலைவலி, ரத்தப்போக்கு உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

ebola

கடந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய இந்த வைரஸ் பாதிப்பால், சுமார் 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். 11,000 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 655 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ebola

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 629 பேர் உயிரிழந்ததாக தெரிவித்த அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

1,080 பேருக்கு எபோலா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 80 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கோ சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிங்க

உலகில் அதிகம் சுற்றுப்புற சூழல் கெட்டுப்போன நாடுகள் எவை தெரியுமா?