மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்…. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது…..

 

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்…. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது…..

நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,900 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோயானா கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடந்த மார்ச் மாத மத்தியிலிருந்து மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. ஏப்ரல் தொடக்கத்தில் வைரஸ் பரவல் வேகமாக இருந்தது மற்றும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

கொரோனா வைரஸ்

மாநில அரசுகளின் ஒட்டு மொத்த புள்ளிவிவரத்தின்படி,  நேற்று மட்டும் நம் நாட்டில் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,356ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,490ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,763ஆக உயர்ந்துள்ளது.

போஸீஸ்காரரை பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்

கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் 5 மாநிலங்கள் ( நேற்று மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்)

மகாராஷ்டிரா (771)
தமிழ்நாடு (527)
குஜராத் (376)
டெல்லி (349)
ராஜஸ்தான் (175)