மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் வழிமுறைகள்!

 

மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் வழிமுறைகள்!

மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு குறைப்பது., மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

சென்னை: மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு குறைப்பது, மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாத நேரங்களில் மின்கட்டணம் நமக்கு வராது. ஆனால், மின்சாரம் உள்ள நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களால் மின்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கும்.

electricity

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களையும் உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், அவற்றை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது?

** வீட்டில் அதிகம் பயன்படுத்தும் மின் கருவிகளில் முக்கிய பங்கு வகிப்பது மின் விளக்குகளே. இஸ்திரி பெட்டி அதிகமான மின்சாரத்தை இழுக்கும். எனவே, அவற்றை தேவையான போது மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

bulbs

** தேவையில்லாமல் மின்விளக்குகளை எரிய விட வேண்டாம்.

** நாம் வீட்டை விட்டு வெளியேறும் போது அனைத்து விளக்குகள், மின்விசிறி உள்ளிட்டவைகளை அணைத்து விட்டு வெளியேற வேண்டும். ஒன்றிற்கு, இரண்டு முறை சோதனை செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

** நாம் செய்யும் முக்கியமான தவறு, நமது வீட்டில் நாம் ஒரு இடத்தில் இருப்போம். மற்றொரு இடத்தில் மின்விளக்குகள், மின்விசிறி உள்ளிட்டவைகள் ஓடிக் கொண்டிருக்கும். அதனை தவிர்க்க வேண்டும்.

electricity

** மின் விளக்குகளுக்கும் மாற்றாக எல்ஈடி தொழில்நுட்பம் கொண்ட மின் விளக்குகளை பொருத்தலாம். எல்ஈடி விளக்குகளில் இருக்கும் எல்ஈடி தொழில்நுட்பமானது குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்.

** எல்ஈடி விளக்குகள் அதிகபட்சம் 80 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கும்.

** சிஎஃப்எல் விளக்குகளை விட குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் எல்ஈடி விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.