மிஞ்சும் உணவுப் பொருட்களை எப்படி பக்குவப்படுத்துவது

 

மிஞ்சும் உணவுப் பொருட்களை எப்படி பக்குவப்படுத்துவது

எதிர்பாராமல் மீதமாகிவிட்ட உணவுப் பொருட்களை பக்குவப்படுத்தி ருசியான வகையில், எல்லோரும் விரும்புகிற மாதிரி சாப்பிடத் தரலாம்.

நிறைய சமயங்களில் என்ன தான் சரியாக திட்டமிட்டு நாம் சமைத்தாலும், உணவு பொருட்கள் மீதமாகி விடும். ஒரு பக்கம் பணம் விரயமாவதுடன், உணவுப் பொருட்களை வீணாக்குவதிலும் நம் மனம் சஞ்சலப்படும். கவலையை விடுங்க… அப்படி எதிர்பாராமல் மீதமாகிவிட்ட உணவுப் பொருட்களை பக்குவப்படுத்தி ருசியான வகையில், எல்லோரும் விரும்புகிற மாதிரி சாப்பிடத் தரலாம். இதோ… நம்முடைய டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக கொஞ்சம் சிம்பிளான டிப்ஸ்…

காலையில் இட்லி மீதமாகி விட்டால், பத்திரமாக வைத்திருந்து மாலையில் உதிர்த்துப் போட்டு உப்பு மாவாகச் செய்து சிற்றுண்டியாக சாப்பிடலாம். பொரியல்கள் அதிகமாக மிச்சப்பட்டு விட்டால் கடலைமாவு, வெங்காயம், கறிவேப்பிலை உப்பு சேர்த்து பக்கோடாவாகவோ, போண்டாவாகவே செய்து தரலாம். திடீர் ஸ்நாக்ஸில் குடும்பம் குஷியாகி காலி செய்யும்.சப்பாத்தி

சமைத்து வைத்த கீரை மிச்சமாகிவிட்டால் உளுந்து மாவு அரைத்து கீரை வடை செய்து பயன்படுத்தலாம்.
தோசைமாவு மீதமாகி புளித்து போய் விட்டால் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம் கலந்து ஊத்தப்பம் செய்து சாப்பிடலாம்.இரவில் சாதம் மீதமாகிவிட்டால் புளியைக் கரைத்து ஊற்றிக் கிளறி  வைத்தால்  மறுநாள் வரை கெடாமல் இருக்கும். மறுநாள் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொட்டி புளியோதரை போலப் பயன்படுத்தலாம்.

ரசம் மிச்சமாகி விட்டால் துவரம் பருப்பை வேகவைத்துக் கடைந்து சேர்த்தால் சாம்பார் ஆகிவிடும்.
பூரி சப்பாத்தி மீதமாகிவிட்டால் மெல்லிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு வாணலியில் எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி வேக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.போண்டா

காரக் குழம்பு மீதமாகிவிட்டால் வாணலியை அடுப்பிலேற்றி ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் குழம்பை கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டால் புதிதாக செய்யப்பட்ட குழம்பு போல சுவையாக மணமாக இருக்கும்.மோர்க்குழம்பு மீதமாகிவிட்டால் கடலை மாவைப் போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்துக் குழம்போடு சேர்த்து வடைகறி போலப் பயன்படுத்தலாம்.

வடை போண்டா போன்றவை மீதமாகி விட்டால் உதிர்த்துப் போட்டு எண்ணெய் விட்டு வறுத்துக் குழம்போடு குழம்பாக போட்டு உண்ணலாம்.கடையில் வாங்கிய ரொட்டித்துண்டுகள் மீதமாகிக் காய்ந்துவிட்டால் இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டால் புத்தம் புதிய ரொட்டித்துண்டுகள் போல் ஆகிவிடும்.