மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்!

 

மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு  நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்!

சிட்கோ நிலத்தை அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது

சென்னை: சிட்கோ நிலத்தை அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

masu

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது  தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் குறிப்பிடும் போது,  தன் மனைவி காஞ்சனாவுக்கு கிண்டி, தொழிலாளர் காலனியில் அசையா சொத்து  உள்ளதாக கூறியிருந்தார்.   இது குறித்து சைதை பார்த்திபன்  என்பவர், காவல்துறையில் புகார் அளித்தார். அதில்  மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளது பொய்யான தகவல் என்றும்  எஸ்.கே.கண்ணன் என்பவர் இறந்த பிறகு அவரது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மா.சுப்ரமணியன் அபகரித்ததாகவும்,  இந்த மோசடிக்கு சிட்கோ அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

hc

புகாரின் அடிப்படையில் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து மா.சுப்ரமணியன் தரப்பில், எஸ்.கே.கண்ணன் உயிருடன் இருந்தபோதே நிலம் அவரது மனைவி காஞ்சனா   பெயருக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இதை தொடர்ந்து இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்று கூறி  நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.