மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்: டிவிட்டரில் அடிச்சி தூக்கிய விஸ்வாசம் வீடியோ பாடல்!

 

மாஸ் காட்டும்  அஜித் ரசிகர்கள்: டிவிட்டரில் அடிச்சி தூக்கிய விஸ்வாசம்  வீடியோ பாடல்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் அடிச்சுத்தூக்கு வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் அடிச்சுத்தூக்கு வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் சிவா -அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இது அஜித்தின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

viswasam

இந்நிலையில் அடிச்சுத்தூக்கு பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடிச்சுத்தூக்கு  பாடலுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து இப்பாடல் வெளியானது அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து #AdchiThookuVideoSong என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.