மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!  

 

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!  

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போதுபேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

master

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழா மேடைக்குச் சென்ற விஜய்யின் தாய், தந்தையிடம் உங்கள் ஆசை என்ன என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்க, விஜயைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். உடனே மேடைக்கு வந்த விஜய் தனது பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றினார்.