மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 

மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போதுபேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. 

LokeshKanagaraj

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.