மாஸ்க் போடாமல் வந்தால் ரூ.500 அபராதம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை!

 

மாஸ்க் போடாமல் வந்தால் ரூ.500 அபராதம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை!

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரே வழி சமூக விலகலை கடைபிடிப்பது தான்.

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரே வழி சமூக விலகலை கடைபிடிப்பது தான். அதே போல மாஸ்க் மற்றும் சானிடைசர்களை முறையாக உபயோகிப்பதும் நோய் தொற்று நமக்கு பரவுவதில் இருந்து தடுக்கும். அதனால் மருத்துவர்கள் மாஸ்க் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் வெளியே வருவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி மக்கள் செல்கின்றனர். அதனால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதாவது வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் வழக்குப்பதிவு செய்வது, அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ttn

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும் வாகன ஓட்டிகள் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாஸ்க் அணியாமல் வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.