மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 

மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மாலே: மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்காசியா நாடான மாலத்தீவுகளில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றார். இந்நிலையில், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராஹிம் சோலிஹ் இன்று பதவியேற்கவுள்ளார். இதற்கான விழா தலைநகர் மாலேவில் நடக்கிறது.

முன்னதாக, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த போது, தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு  வருமாறு பிரதமரை இப்ராஹிம் சோலிஹ் அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாலத்தீவு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அந்நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை செல்லாத நிலையில், தற்போது அந்நாட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

மாலத்தீவின் முந்தைய ஆட்சியின்போது, சீனாவின் ஆதிக்கம் காரணமாக இந்தியாவுடனான நட்புறவை அந்நாடு விலக்கியது. தற்போது அந்நாட்டுக்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் இப்ராஹிம் சோலிஹ்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகம் மலர்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். மாலத்தீவில் நிலையான ஜனநாயகம், அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது” என பதிவிட்டுள்ளார்.